பொன்முடியை அடுத்து சிக்கலில் மகன் கவுதம சிகாமணி..!! ஜனவரி 4-ஆம் நாள் குறித்த நீதிமன்றம்..!

DMK K. Ponmudy Madras High Court
By Karthick Dec 22, 2023 10:48 AM GMT
Report

அமைச்சர் பொன்முடிக்கு நேற்று 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவர் மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 50 லட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி வழக்கு

தமிழக உயர் கல்வி துறை அமைச்சராக இருந்து பொன்முடிக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

gauthama-sigamani-charge-sheet-will-be-submitted

6 மாதங்கள் அவருக்கு அவகாசம் இருப்பினும், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு தற்போது அவரின் பொறுப்பு ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 4..

இதற்கிடையில், பொன்முடியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் சிகாமணி மீது வரும் ஜனவரி 4-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

gauthama-sigamani-charge-sheet-will-be-submitted

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், நவம்பர் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகிய கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

பொன்முடி வழக்கின் தீர்ப்பு - அதிரடியாக ரத்து செய்த உயர்நீதிமன்றம்..! பரபரப்பு உத்தரவு..!

பொன்முடி வழக்கின் தீர்ப்பு - அதிரடியாக ரத்து செய்த உயர்நீதிமன்றம்..! பரபரப்பு உத்தரவு..!

செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விசாரணை தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.