2 நாள் கழிச்சுதான் ஓகே சொன்னாங்க - லவ் சீக்ரெட் பகிர்ந்த கெளதம் கார்த்திக்!

Gautham Karthik Manjima Mohan Tamil Cinema Marriage
By Sumathi 1 வாரம் முன்

கெளதம் கார்த்திக், மஞ்சிமாவுடனான காதல் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

கெளதம் -  மஞ்சிமா

கெளதம் கார்த்திக் - மஞ்சிமா திருமணம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வடபழனியில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கெளதம், தேவராட்டம் படத்தில் பணிபுரியும்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

2 நாள் கழிச்சுதான் ஓகே சொன்னாங்க - லவ் சீக்ரெட் பகிர்ந்த கெளதம் கார்த்திக்! | Gautham Karthik Shares About Their Love Story

அதன் பிறகு எங்கள் உறவு அடுத்த தளத்துக்குச் சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதோடு, நான் சோர்வாக உணரும்போதெல்லாம் என்னை மீட்டெடுக்கிறார். நான் தான் காதலை முதலில் சொன்னேன். மஞ்சிமா இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்து ஓகே சொன்னார்.

திருமணம்

எங்கள் இரண்டு குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சரியான நபரை நீங்கள் வாழ்வில் சந்தித்தால் அவர் உங்களை முழுமையடையச் செய்வார் என என் அப்பா கூறுவார். அப்படி நான் வாழ்வில் சந்தித்த நபர் தான் மஞ்சிமா எனத் தெரிவித்தார்.

2 நாள் கழிச்சுதான் ஓகே சொன்னாங்க - லவ் சீக்ரெட் பகிர்ந்த கெளதம் கார்த்திக்! | Gautham Karthik Shares About Their Love Story

தொடர்ந்து பேசிய மஞ்சிமா, கார்த்திக் நடித்த படங்களில் தனக்கு ரங்கூன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் எனத் தெரிவித்தார்.