காதலர் தினத்தில் பிரபல நடிகையுடன் கோவிலுக்கு வந்த நடிகர் - திரண்ட கூட்டம்
நடிகர் கெளதம் கார்த்திக் மனைவியான மஞ்சிமா மோகனுடன் பழனியில் சாமி தரிசனம் செய்தார்.
கெளதம்-மஞ்சிமா
கெளதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய
கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, வீட்டில் எளிமையாக உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
சாமி தரிசனம்
இந்நிலையில், இன்று இருவரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது சென்றனர். இதனைப் பார்த்த பக்தர்கள் புகைப்படம் எடுக்க கூட்டமாக திரண்டனர்.
அதனைத் தொடர்ந்து விரைவாக சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலை மீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றனர்.