கடைசி நேரத்தில் Back அடித்த கெளதம், மஞ்சிமா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமணம் தொடர்பாக எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கெளதம் - மஞ்சிமா
கெளதம் கார்த்திக் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய
கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்னம் இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.
வரவேற்பு?
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பதிவின் மூலம் அவருடனான காதலை உறுதிப்படுத்தியிருந்தார். அதன்பின் நான் தான் காதலை முதலில் சொன்னேன். மஞ்சிமா இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்து ஓகே சொன்னார் என கெளதம் அனுபவம் பகிர்ந்தார்.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று இருவரும் கூட்டாக அறிவித்தார்கள். ஆனால் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடக்காதாம்.