நபிகள் நாயகம் குறித்து இழிவு பேச்சு: நுபுர் சர்மாவிற்கு கவுதம் கம்பீர் ஆதரவு

BJP Gautam Gambhir
By Thahir Jun 13, 2022 09:57 AM GMT
Report

தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது இஸ்லாமியர்களின் இறைதுாதர் முகமது நபி குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்த நுபுர் ஷர்மாவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் வெடித்த போராட்டம் 

இஸ்லாமியர்களின் இறைதுாதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவும்,நவீன் ஜிண்டாலும் இழிவான வகையில் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இவர்களின் கருத்து உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

கவுதம் கம்பீர் ஆதரவு

இந்நிலையில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பாஜக எம்.பியும் பிரபல கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

தனது கருத்துக்கு மனிப்பு கேட்ட பிறகும் ஒரு பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் மோசமான நிலையைக் கண்ட பிறகு அமைதியாக இருக்கும்.

"மதச்சார்பற்ற தாராளவாதிகள்' என கூறிக்கொள்பவர்களின் மவுனம் நிச்சயமாக கேளாத தன்மை போன்றதுதான்" எனசாடியுள்ளார்.