எத்தனை சதங்கள் அடித்தாலும் கோலி சச்சின் ஆக முடியாது - கெளதம் கம்பீர் கருத்து
கோலி சச்சின் ஆக முடியாது என கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
கெளதம் கம்பீர்
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட்கோலி தனது 73 சாதத்தை பதிவு செய்தார். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார் இந்தநிலையில் சச்சினின் சாதனைகளை கோலி முறியடிப்பர் என்று அவரது ரசிகர்கள் கருத்துகளை பகிர்த வண்ணமாக உள்ளனர்.
இந்நிலையில் எத்தனை சதங்கள் அடித்தாலும் கோலியை சச்சினுடன் ஒப்பிட முடியாது என்று முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சச்சின்டென்டுல்கரை விட கோலி அதிக சதங்களை அடிப்பார்.
விமர்சனம்
இப்போது விதிமுறைகள் மாறிவிட்டன என்றும் அப்போதைய காலத்தை இப்போது ஒப்பிட முடியாது என்றும் கூறினார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலி ஒரு தலைசிறந்த வீரர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கம்பீரின் விமர்சனங்கள் பல சமயங்களில் இணையதளங்களில் கிண்டலுக்கும் கேலிக்குமே உள்ளாகியிருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் இந்திய அணி பற்றிய அவரின் விமர்சனங்கள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை, புரிந்துகொண்டாலும் அதை ஆக்கப்பூர்வமானதாக யாருமே எண்ணுவதும்மில்லை.