இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் - சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்த நிலையில் தீவிரமாக புதிய பயிற்சியாளரை தேடி வந்த பிசிசிஐ கவுதம் கம்பீரை புதிய பயிற்சியாளராக அறிவித்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை 7 சீசனுகளுக்கு வழிநடத்தியதோடு, அதில், 2 முறை கோப்பைகளை வென்று கொடுத்ததோடு, 5 முறை பிளே ஆப் சுற்றுக்கு அணியை அழைத்து சென்றவர்.
ஜெய் ஷா
கவுதம் கம்பீரை பயிற்சியளராக நியமனம் செய்தது குறித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் "இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீரை வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய இந்திய புதிய பயணத்துக்கு பிசிசிஐ முழுமையாக ஆதரவு கொடுக்கிறது” என கூறியுள்ளார்.
இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள ஸ்ரீலங்காக்கு எதிரான தொடரின் போது பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ள கவுதம் கம்பீர் 2027 உலகக்கோப்பை வரை பதவியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம்
இந்நிலையில் கவுதம் கம்பீரின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் வருடத்திற்கு ரூ 12 கோடி பெற்று வந்தார். கவுதம் காம்பீர் இதை விட அதிக சம்பளம் கேட்கிறார் என தகவல்கள் வெளியாகியது.
மேலும் போட்டி தொடர்களின் போது ஒரு நாள் அல்லோவான்ஸாக $250 (இந்திய மதிப்பில் ரூ21000) வழங்கப்படும். மேலும் அணி வீரர்கள் தேர்விலும் தனக்கு அதிகாரம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.