காலை தொட்டு கும்பிடல.. அதனால வாய்ப்பு தரல; அப்போ எடுத்த முடிவு.. கவுதம் கம்பீர் பளீச்!
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியில் வெற்றிகரமான வீரராக இருந்தவர் கவுதம் கம்பீர். இவர் இந்திய அணி 2007-ல் டி20 உலகக் கோப்பை வென்றதிலும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் கவுதம் கம்பீரை இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேட்டி எடுத்துள்ளார்.
ஒரு சத்தியம்
அதில் பேசிய கம்பீர் "நான் 12 அல்லது 13 வயதில் இருக்கும் போது பயிற்சி தலைவரின் காலை தொட்டு வணங்காத காரணத்தால் எனக்கு அண்டர் 14 கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதி கிடைக்கவில்லை.
அதுதான் எனது முதல் அண்டர் 14 தொடர். அப்போது எனக்கு நானே ஒரு சத்தியம் செய்து கொண்டேன். நான் இனி யாருடைய காலையும் தொட மாட்டேன், அதே போல எனது காலையும் யாரையும் தொட விடமாட்டேன் என்று முடிவு செய்தேன்"
என்று தெரிவித்துள்ளார்.