சாவை 2முறை அருகில் பார்த்தேன் - பகீர் அளித்த கவுதம் அதானி
இரு முறை சாவின் விளிம்புக்குச் சென்று தப்பியதாக கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
கவுதம் அதானி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் அதானி குழும தலைவர் கவுதம் அதானி. நாட்டின் நம்பர் 1 பணக்காரரும், உலகின் 3ஆவது பெரிய பணக்காரருமாவார். இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த அவர் அதிர்ச்சி நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதில், "மோசமான அனுபவங்களை மறந்துவிடுவது நன்மையே. 1990களில் என்னை ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டது. ஒரு நாள் முழுவதும் அவர்கள் பிடியில் தான் இருந்தேன். ஆனால்,அப்போது கூட நன்றாக உறங்கினேன். பாதுகாப்பு நமது கையில் இல்லாத போது கவலை பட்டு என்ன ஆகப்போகிறது.
திடுக்கிடும் தகவல்
நம் கையில் இல்லாத விஷயம் குறித்து கவலை கொள்ள கூடாது என நம்புபவன் நான். விஷயங்கள் தானாக நடக்கும். அதேபோல், 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது தாஜ் ஹோட்டலில் சிக்கியிருந்தவர்களில் நானும் ஒருவன். நான் துபாயில் இருந்து வந்த வணிக நண்பர்களுடன் சந்திப்பை மேற்கொண்டேன்.
சந்திப்பை முடித்து கிளம்பும் போது தான் ஹோட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. படிக்கட்டு வழியாக சென்றால் ஆபத்து என ஹோட்டல் ஊழியர்கள் என்னை பின்கதவு வழியாக ஹோட்டல் சமையல் அறைக்கு அழைத்து சென்று பாதுகாத்தனர்.
ஒரு வேளை அன்று மீட்டிங்கில் இல்லாமல் பால்கனியிலோ, படிக்கட்டிலோ நான் நடந்து கொண்டிருந்தால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியிருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
போதைப்பொருள் சூத்திரதாரி பாசிக்கின் துபாய் தங்க வியாபாரம்! இலங்கையில் மட்டும் 100 பில்லியன் சொத்துக்கள் IBC Tamil