தனது 60-வது பிறந்தநாளையொட்டி ₹60,000 கோடி நன்கொடை வழங்கினார் கவுதம் அதானி - குவியும் வாழ்த்து

Gautam Adani
By Nandhini Jun 24, 2022 06:23 AM GMT
Report

தனது 60-வது பிறந்தநாளையொட்டி சமூக நலப்பணிக்காக ₹60,000 கோடி நன்கொடை வழங்கியுள்ளார் கவுதம் அதானி.

அதானி குழுமம்

இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்களில் அதானி குழுமம் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரி வர்த்தகம் மற்றும் நிலக்கரி ஒப்பந்ததாரராக அதானி எண்டர்பிரைசஸ் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தின் ஒப்பந்தம் அதானி எண்டர்பிரசஸிடம் இருக்கிறது. மேலும், 8 விமான நிலையங்களை இயக்கும் ஒப்பந்தத்தையும் அதானி எண்டர்பிரைசஸ் பெற்றிருக்கிறது. 

நன்கொடை

இந்நிலையில், 60-வது பிறந்தநாளையொட்டி சமூக நலப்பணிக்காக ₹60,000 கோடி நன்கொடை வழங்கியுள்ளார் கவுதம் அதானி.

இது குறித்து இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி கூறுகையில் -

எங்கள் தந்தையின் 100-வது பிறந்தநாள் மற்றும் எனது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதானி குடும்பம் இந்தியா முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 60,000 கோடி ரூபாயை ஒதுக்க உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. இது சமமான, எதிர்காலத்துக்கு ஏற்ற இந்தியாவைக் கட்டியெழுக்க உதவுவதற்கான பங்களிப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

தனது 60-வது பிறந்தநாளையொட்டி ₹60,000 கோடி நன்கொடை வழங்கினார் கவுதம் அதானி - குவியும் வாழ்த்து | Gautam Adani 60 000 Crore Donation