அமெரிக்க காவல்துறையால் கைது செய்யப்படும் கெளதம் அதானி - என்ன நடக்கும்!
அதானிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதானி
கெளதம் அதானி சுமார் 2000 கோடி ரூபாய் அளவு இந்திய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம்
முதலீடுகளைப் பெற்றதாகவும் அமெரிக்க நீதியமைப்பின் நடுவர் மன்றம் குற்றம்சாட்டியுள்ளது. அவரது நிறுவனம் அதற்கு லாபகரமான சோலார் மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது வாரண்ட்?
தொடர்ந்து அதானியின் வழக்கு கிராண்ட் ஜூரிகளால் குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்த தகுதி உடையதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கென்யாவில் அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதானி, அவரின் உறவினர் சாகர் அதானி மற்றும் 6 உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிராக
கைது வாரண்ட்டை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்து அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.