இனி ரூ.450-க்கு கேஸ் சிலிண்டர் - இந்த வகை குடும்ப அட்டை உள்ளவர்கள் உடனே இதை பண்ணுங்க!
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பயனாளிகளுக்கு, 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்.
மத்திய அரசு
மத்திய அரசு பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு வகையான நலத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகச் சமையல் சிலிண்டர் விலையில் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2016 மே 1-ம் தேதி பிரதமர் மோடி பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தினை துவக்கி வைத்தார் .
இந்த திட்டத்தின் மூலம் 9 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளும் கேஸ் அடுப்பு மட்டுமல்லாமல், அதற்கான வைப்புத்தொகை , ரப்பர் குழாய், ரெகுலேட்டர் போன்றவையும் இல்லத்தரசிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன .
மேலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 450 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பிரதமரின் முயற்சியால் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர்
அதன் ஒரு பகுதியாக ரேஷன் கார்டில் முழு கோதுமை பெறும் குடும்பங்கள், அதாவது, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளி குடும்பங்கள், ரேஷன் கார்டு ,ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் .இது தொடர்பான பணிகள் நியாய விலைக் கடை மூலம் தங்கள் எல்பிஜி ஐடியை இணைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எல்பிஜி சிலிண்டர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களின் எல்பிஜி ஐடிகளை ஆதார்/ரேஷன் கார்டுகளுடன் வழங்குவது இன்று( நவ 5 முதல் நவ 30), 2024 வரை செயல்படுத்தப்படும் என்று முதன்மைச் செயலாளர் சுபீர் குமார் தெரிவித்துள்ளார்.