சிலிண்டர் வாங்குறீங்களா? இனி இதை செய்யாவிட்டால் மானியம் இல்லை - முக்கிய அறிவிப்பு!
சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிலிண்டர் மானியம்
மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரூ.300 மானியம் பெற பொதுமக்கள் E-KYCயை முடிக்க வேண்டும்.
அவ்வாறு E-KYC முடிக்காதவர்களுக்கு வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் E-KYCயை முடிக்க காலக்கெடு வழங்கப்பட்டது.
E-KYC காலக்கெடு
அதன்பிறகு மே 31 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இந்நிலையில் சில லட்சம் பேருக்கு மானியம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இ-கேஒய்சி முடிக்காதவர்கள் உடனடியாக அதை செய்வதன் மூலம் தொடர்ந்து மானியம் பெற முடியும். உஜ்வாலா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இ-கேஒய்சியை எளிதாக செய்யலாம்.
அதில், பெயர், மொபைல் எண், முகவரி, ஆதார் போன்ற விவரங்கள் தவறாக கொடுக்கப்பட்டிருந்தாலும், அதை திருத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.