பெண்களுக்கான அசத்தல் திட்டம்; இலவச சிலிண்டர் - எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?
பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா திட்டம்
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு ஆண்டுக்கு இருமுறை இலவச சிலிண்டர் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தீபாவளிக்கு முதல் சிலிண்டரும், ஹோலி பண்டிகையன்று பெண்களுக்கு இரண்டாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.
இலவச சிலிண்டர்
இதனால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைவார்கள். மீதமுள்ள அனைத்து சிலிண்டர்களும் ரூபாய் 600 முதல் ரூபாய் 700 வரை மட்டுமே கிடைக்கும். சிலிண்டர் வாங்கும் போது 400 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபருக்கு 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
இதுவரை சிலிண்டர் இணைப்பை பெறதவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உடையவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை கொண்டு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
www.pmuy.gov.in என்ற இணையதளத்தின் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அடையாள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த நடைமுறைக்கு பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.