சிலிண்டருக்கான மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு - அரசு முக்கிய அறிவிப்பு!
சிலிண்டருக்கு ரூ.200 மானியம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.
ரூ.200 மானியம்
கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிரடி
இந்த மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.