குட் நியூஸ்... தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!

Tamil nadu Chennai LPG cylinder price
By Vinothini Aug 01, 2023 04:13 AM GMT
Report

 தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சிலிண்டர் விலை சரிவு

மாதந்தோறும் கேஸ் சிலிண்டர்களின் விலையை முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ. 92.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது,

gas-cylinder-rate-reduced

அதனால் 1,945 ரூபாயில் இருந்து 1,852.50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.1,118 உள்ளது.

வணிகர்களுக்கு மகிழ்ச்சி

இதனை தொடர்ந்து, தற்போது 92 ரூபாய் குறைக்கப்பட்டதால், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வர்த்தக சிலிண்டர் விலை 1850 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வர்த்தக சிலிண்டர் விலை 1831 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

gas-cylinder-rate-reduced

மேலும், சிலிண்டர் ஒன்றுக்கு நூறு ரூபாய் அளவுக்கு விலை குறைந்துள்ளதால் தொழிலில் தங்களுக்கான லாபம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.