மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது..!
Chennai
By Thahir
தமிழகத்தில் மீண்டும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.3 உயர்ந்துள்ளது.
கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு 1015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி சென்னையில் வீட்டு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1018க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2507க்கு விற்பனையாகிறது.