சுகரை கன்ட்ரோல் செய்யனுமா? அப்போ பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க!
பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயை குணப்படுத்த வழியில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அதற்கேற்ப உணவு முறைப் பின்பற்றினால் எளிதில் கட்டுப்படுத்த முடியும். அதன் வரிசையில் பூண்டு உட்கொள்ளுவதால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
பூண்டில் கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் என இன்னும் பல சத்துக்கள் உள்ளன. பூண்டில் வரும் காரமாண சுவைக்கும் வாசனைக்கும்”அலிசின்”என்ற சிறந்த கந்தக கலவை தான் காரணம். இது சுகருக்கு மட்டுமல்லாமல் பலவிதமான நோய்களுக்கும் மருந்தாக உதவுகிறது.
பூண்டின் நன்மைகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், சர்க்கரையை கட்டுப்படுத்த இயலும். டைப் 2 நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் பங்கு வகிக்கிறது. கார்போஹைட்ரேட்டுகள் நேரடியாக இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கின்றன மற்றும் பூண்டு சாப்பிடுவது அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
தயிரில் பூண்டு நசுக்கி,சீரகப் பொடி,உப்பு கலந்து சாப்பிட்டு வந்தாள் நோய்த்தொற்றைத் தடுக்கும். இரவு தூங்கும் முன் பாலுடன் பூண்டு விழுது சேர்த்து குடித்து வந்தால் பாலியல் ஆரோக்கியம் ஏற்படும். நெய்யில் சில பல் பூண்டை உப்பு, மிளகுடன் வருத்து சாப்பிட்டு வர செரிமானத்தை சீர் செய்யும்.
காலையில் வெறும் வயிற்றில் சில பல் பூண்டை தண்ணீரில் அரைத்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சூடான பாலில் பூண்டு விழுது மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து குடித்து வர இருமல், ஆஸ்துமா, சுவாச பிரச்சணை தீரும்.