Saturday, Apr 5, 2025

அண்ணனின் திருமணத்தில் கலந்துகொள்ளாத கங்குலி - என்ன காரணம்?

Sourav Ganguly
By Sumathi 8 months ago
Report

தனது அண்ணனின் திருமணத்தில் சவுரவ் கங்குலி கலந்துகொள்ளவில்லை.

சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது மூத்த சகோதரர் சினேஷிஸ் கங்குலி(59). வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) தலைவராக உள்ளார்.

ganguly with brother

இவர் அர்பிதா சாட்டர்ஜி(47) என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் அவர்கள் வசித்து வரும் குடியிருப்பிலேயே திருமணத்தை பதிவு செய்து, மாலை மாற்றிக்கொண்டனர்.

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

பாகிஸ்தானுக்கு விளையாட செல்லும் இந்தியா - பிசிசிஐ-யை கண்டுகொள்ளாத ஐசிசி!

சகோதரர் திருமணம்

இதில், நெருங்கிய நண்பர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டனர். ஆனால், மணமக்களின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை எனத் தெரிகிறது. சமீபத்தில் சவுரவ் கங்குலியும் அவரது மனைவி டோனாவும் தங்கள் மகள் சனாவை பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தனர்.

அண்ணனின் திருமணத்தில் கலந்துகொள்ளாத கங்குலி - என்ன காரணம்? | Ganguly Not Attend Brother Snehasish Marriage

டோனா கொல்கத்தாவிற்கு வந்துவிட்ட நிலையில், சினேகாஷிஸ் திருமணத்தில் கலந்துக் கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து, ஆகஸ்ட் 7ஆம் தேதி புறவழிச்சாலையில் உள்ள சொகுசு விடுதியில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சினேகாஷியின் முன்னாள் மனைவி மாம் கங்குலி ஒரு பிரபலமான நடனக் கலைஞர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.