பிசிசிஐ'யில் வெடிக்கும் சர்ச்சைகள் - ஜெய் ஷாவிற்கு எதிராக முதல் முறை பேசிய கங்குலி..!

Sourav Ganguly Indian Cricket Team Board of Control for Cricket in India
By Karthick Mar 04, 2024 02:20 AM GMT
Report

ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோருக்கு அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இஷான் கிஷன் நீக்கம்

ரஞ்சி கோப்பையில் விளையாடாததை கண்டித்து பிசிசிஐ ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை அணியின் ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கினர்.

ganguly-comments-against-jay-shah-in-ishan-issue

இது தற்போது இந்திய அணிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் விளையாடியா..? வந்தார்கள் என்று பல முன்னாள் வீரர்கள் கேள்விகளை தொடர்ந்து எழுப்ப துவங்கிவிட்டனர்.

கங்குலி கருத்து

இதன் ஒரு நீட்சியாக தற்போது முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

எல்லை மீறும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்; கடுப்பில் பிசிசிஐ - கடும் நடவடிக்கை!

எல்லை மீறும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்; கடுப்பில் பிசிசிஐ - கடும் நடவடிக்கை!

இது குறித்து அவர் பேசும் போது, இஷான் கிஷன் போன்ற வீரர்களிடம் ஜெய்ஷா மற்றும் ரோஜர் பின்னி இல்லையெனில் தேர்வு குழுவினர் கண்டிப்பாக பேசியிருக்க வேண்டும் என்று கூறி, இஷான் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ganguly-comments-against-jay-shah-in-ishan-issue

இம்முறை அவர் விளையாடவில்லை என்பதற்காக இஷான் மோசமான வீரராக மாறிவிடுவாரா என்ன? என்று வினவிய கங்குலி,இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் ரஞ்சி போட்டிகள் விளையாடாமல் போவது இதுதான் முதல் முறையா? என்றும் கேள்வியை எழுப்பினார்.

ganguly-comments-against-jay-shah-in-ishan-issue

பிசிசிஐ இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக கூறினார்.