காதலனுடன் மாணவி உல்லாசம் - வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!
காதலனின் நண்பர்கள், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஆந்திரா, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, வம்சி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
வம்சி தன் காதலியை கிருஷ்ணா நகரில் உள்ள நண்பர்களின் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனை நண்பர்கள் மூன்று பேர் வீடியோவாக எடுத்துள்ளனர்.
காதலன் உடந்தை
அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு காதலனும் உடந்தையாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அவரது தந்தை அவரை காப்பாற்றி விசாரித்துள்ளார். உடனே தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்திடம் கூறியுள்ளார்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வம்சி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.