ஒரு நாளில் 10 முதல் 15 ஆண்கள்... வலுக்கட்டாயமாக ஸ்பாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
ஸ்பாவில் வேலைக்குச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பாவில் வேலை
அரியானா, குருகிராம் காவல்நிலையத்தில் சிறுமி ஒருவர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், குரூக்ராம் செக்டார் 49ல் தான் வசித்து வருகிறேன். நான் வேலை இல்லாத நேரத்தில் பல்வேறு இடங்களிலும் வேலை தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு அறிமுகமான ஒருவர் டாக்டர் கிளினிக் ஒன்றில் என்னை வேலைக்கு சேர்த்துவிட்டார். ஆனால் இரண்டு நாளிலேயே அங்கிருந்து என்னை நீக்கிவிட்டனர். பின்னர் நான் மீண்டும் வேலை தேடினேன். அப்போது 15 நாட்கள் கழித்து அவர் என்னை சந்தித்தார்.
பாலியல் வன்கொடுமை
இந்த முறை கிங் ஸ்பா என்ற அழகுநிலையத்தில் என்னை வரவேற்பாளராக பணிக்கு சேர்த்துவிட்டார். அந்த அழகுநிலையம் ஓமக்ஸ் மாலில் உள்ளது. அந்த ஸ்பா ஜுமா என்பவருக்கு சொந்தமானது. ஜுமாவை தன்னுடைய அத்தை என எனக்கு அறிமுகமானவர் கூறுவார்.

வேலைக்கு சேர்ந்த முதல்நாளே எனக்கு சோதனை தொடங்கிவிட்டது. ஸ்பாவில் உள்ள அறைக்கு என்னை அழைத்துச்சென்றனர். அங்கிருந்தவர் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அடுத்த நாள் முதல் வேலைக்கு வர முடியாது எனக்கூறிவிட்டேன்.
மிரட்டல்
ஆனால் என்னை வன்கொடுமை செய்த வீடியோவை ரெக்கார்ட் செய்து என்னிடம் காட்டினர். இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டினர். நான் தொடர்ந்து ஸ்பாவுக்குச் சென்றேன். என்னை ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் வரை வன்கொடுமை செய்தனர்.
பின்னர் அம்மாவிடம் நடந்ததைக் கூறி அவரின் உதவியுடன் வேலையை விட்டேன். ஆனாலும் என்னை அவர்கள் பின் தொடர்கிறார்கள். நானும் என் அம்மாவும் ஆபத்தில் உள்ளோம். நான் ஏற்கெனவே இது தொடர்பாக புகாரளித்தேன். ஆனால் குற்றவாளிக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு என்னிடம் பொய் கூறச்சொன்னார்கள்.
புகார்
நான் ரபேல் என்பவரை காதலித்ததாகவும் ஒப்புக்கொள்ளக் கூறினர். பின்னர் நான் அந்த புகாரை விட்டுவிட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த போலீசார், புகாரளித்த பெண் வயது தொடர்பான ஆவணம் எதையும் இதுவரை சமர்பிக்கவில்லை.
அதனால் அவர் மைனரா என்பது தெரியவில்லை. ஆனால் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.