வைரமுத்து நல்ல மனிதரே கிடையாது - சின்மயிக்கு ஆதரவு தெரிவித்த கங்கை அமரன்
வைரமுத்துவை, கங்கை அமரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
சின்மயி விவகாரம்
பிரபல பின்னணிப் பாடகி சின்மயி, திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் ரீதியாகக் குற்றாஞ்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வைரமுத்து தமிழ்த் திரையுலகத்தால் ஓரங்கட்டப்பட்டார். அதேபோல், டப்பிங் யூனியனில் இருந்தும் சின்மயி தடை செய்யப்பட்டார்.
கங்கை அமரன் சாடல்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பாடகி சின்மயியுடன் பாடலாசிரியர் கங்கை அமரன் கலந்துகொண்டார். அப்போது, அவரிடம் MeToo விவகாரத்தில் சின்மயியை பலரும் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கங்கை அமரன், “ஏம்மா இப்படி வைரமுத்துவை பற்றித் தவறாக பேசுற? அவர் தங்கமான ஆளு. அப்படிப்பட்ட ஆள் மேல நீ குற்றம் சொல்லலாமா? அவர் எப்படிப்பட்ட உத்தமமான ஆளு? அதிசயப் பிறவியான ஆளு” எனச் சிரித்தப்படியே கூறினார்.
பின்னர் மீண்டும் பேசிய அவர், “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை நிச்சயமாக ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர் நல்ல மனிதர் இல்லை” என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan