மரியாதைக்கு கூட கேட்கல.. நாகரிகமே இல்லையா? பிரபல இயக்குநரை தாக்கிய வைரமுத்து?
தனது பாடல் வரிகளை, படத் தலைப்புகளாக பயன்படுத்தி வருவதாக வைரமுத்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா,
வைரமுத்து ஆதங்கம்
ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல...
என்னுடைய
— வைரமுத்து (@Vairamuthu) June 9, 2025
பல்லவிகள் பலவற்றைத்
தமிழ்த் திரையுலகம்
படத் தலைப்புகளாகப்
பயன்படுத்தி இருக்கிறது
அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்
என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு
மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை
ஒன்றா இரண்டா...
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,…
சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை. செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது.
ஆனால் என்னை ஒருவார்த்தைக் கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்தப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. இவரது பதிவில் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம், உயிரே படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan