கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை -அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று பீகார் சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கங்கை நதிநீர்
பீகார் மாநில சட்டப்பேரவையில் 2024-2025 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம் பற்றி முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் பீகாரில் கங்கை நதியின் தரத்தை 34 இடங்களில் பீகார் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்தது. அதில், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நதி நீரில் ‘கோலிபாம்’ என்ற பாக்டீரியா சார்ந்த நுண்கிருமிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாட்னா, பக்சார், சாப்ரா, பாகல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளன.
பீகார்
அங்குள்ள வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், சாக்கடையும் கங்கையில் கலப்பதுதான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கங்கை நதிநீரில் இருக்கும் இதர அளவீடுகள், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கின்றன.
அவை நீர் வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றின் வாழ்வுக்கு உகந்ததாக இருக்கின்றன, நீர்ப்பாசனத்துக்கும் ஏற்றதாக இருப்பதாக இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
