17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வீடியோவை காட்டி தந்தையை மிரட்டிய கொடூரம்!
17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
அசாம், கோடி நகரைச் சேர்ந்தவர் விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மாடுகளுக்கு தீவனம் வாங்க தனது 17 வயது மகளை கடைக்கு அனுப்பியுள்ளார். அப்போது சிறுமியை தொடர்ந்து நான்குபேர் சென்றுள்ளனார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுமியை இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி மயக்கமடைந்துள்ளார்.
மிரட்டல்
அதனையடுத்து சி்றிது நேரம் கழித்து கண் விழித்த சிறுமி தனது வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியை மருத்துவமனிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் மூலம் தகவல் கிடைத்து வந்த போலீஸார், விசாரித்து வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், சிறுமியிடம் தந்தையிடம் அந்த வீடியோவைக் காட்டி பணம் கேட்டும் கும்பல் மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகிய ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அனைத்து குற்றவாளிகளும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என ஏசிபி ரித்தேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.