எனக்கு அட்வைஸ் பண்ண நீ யாரு?.. பெண்ணை கிரிக்கெட் பேட்டால் அடித்து தாக்கிய கும்பல் - வெறிச்செயல்!
இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து இளம்பெண் ஒருவரை அடித்து தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஸ்ரீராமபுரா பகுதியை சேர்ந்தவர் 30 வயதான பானுப்பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி ஆகிய 3 பேர் தண்ணீரை வீணடிப்பதை பார்த்துள்ளார்.

அப்பொழுது அவர் குழாய் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் எங்களுக்கு அறிவுரை கூற நீ யார்? என்று கூறி அவரை தாக்கியுள்ளனர், அப்பொழுது அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
தாக்குதல்
இந்நிலையில், அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அந்த 3 பெண்களும் 10 ஆண்களுடன் இரவு 9.30 மணியளவில் பானுப்பிரியா வீட்டிற்கு சென்று அந்த கும்பல் பானுப்பிரியாவை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து சாலையில் தள்ளி கிரிக்கெட் மட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கி அவரது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்துள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனு, பிரியதர்ஷினி மற்றும் ஷாலினி உள்பட 13 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan