கந்தசஷ்டி நிறைவு நாள் - பழனியில் கோலாகலமான திருக்கல்யாணம்!

Tamil nadu Festival
By Sumathi Oct 31, 2022 06:56 AM GMT
Report

கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு இன்று பழனியில் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.

கந்தசஷ்டி விழா

கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. அதன்படி, அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கடந்த 25ஆம் தேதி காப்புகட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளினார்.

கந்தசஷ்டி நிறைவு நாள் - பழனியில் கோலாகலமான திருக்கல்யாணம்! | Gandashashti Festival Palani Temple Thirukalyanam

பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலுக்கு வந்து அடிவாரம் சென்றடைந்தது. அதன்பின், கிரிவீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

திருக்கல்யாணம் 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு அரோகரா கோஷம் முழங்கினர். இந்நிலையில் நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

மேலும், இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில், திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.