பெயரால் வந்த சிக்கல் - கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகைக்கு பாஸ்போர்ட் மறுப்பு
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் வரும் கதாபாத்திர பெயர் வைக்கப்பட்டுள்ளதால் பாஸ்போர்ட் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ்
பிரபல தொலைக்காட்சி தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ்கு உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த தொடர் 2011 முதல் HBO சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் உள்ள முக்கியமான பெண் கதாப்பாத்திரத்தின் பெயர் கலீஸி.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் தீவிர ரசிகையாக லண்டனை சேர்ந்த லூசி என்ற பெண் தனது மகளுக்கு கலீஸி என பெயர் வைத்துள்ளார்.
டிஸ்னி லேன்ட்
இந்நிலையில் 6 வயதான தனது மகளுடன் பாரிஸில் உள்ள டிஸ்னி லேண்டுக்கு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது மகளுக்கு பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்த போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து வந்த பதில் லூசியை அதிர்ச்சியாக்கியது.
அதில், கலீஸி என்ற பெயர் இருப்பதன் காரணத்தால் உங்கள் மகளின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்தது. அதற்கு, தயாரிப்பு நிறுவனம் கேம் ஆஃப் திரோன்ஸ் கதைக்கு மட்டுமே உரிமை உடையவர்கள் ஆவர். கதாப்பாத்திரத்தின் பெயர்களுக்கு அவர்கள் உரிமை கோரவில்லை என்று வழக்கறிஞர் மூலம் லூசி பதிலளித்தார்.
அனுமதி கடிதம்
ஆனால் இதை ஏற்க மறுத்த, அதிகாரிகள் நீங்கள் அந்த வெப் தொடரின் உரிமையாளரான வார்னர் ப்ரோஸிடம் இருந்து கலீஸி என்ற பெயரை உபயோகிக்கலாம் என்ற அனுமதி கடிதத்தை கொண்டு வாருங்கள் என்று பதிலளித்துள்ளனர்.
இந்த பதிலால் ஆத்திரமடைந்த லூசி, "என் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை பெறும் போது வராத பிரச்சனை இப்போது ஏன்? இது பிரச்சன்னை ஆகும் என்றால் அப்போதே சான்றிதழ் தர மறுத்திருக்கலாமே" என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து, லூசியை தொடர்பு கொண்ட பாஸ்பார்ட் அலுவலக அதிகாரி, தங்கள் செயலுக்கு வருந்துகிறோம் என்றும், கலீசியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.