மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய நண்பர்களுக்கு அனுமதியளித்த கணவர்!

Sexual harassment Uttar Pradesh India
By Vidhya Senthil Sep 13, 2024 07:16 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

சூதாட்டத்தில் நண்பர்களிடம் மனைவியைக் கணவன் பணயம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 சூதாட்டம்

புராணங்களில் மகாபாரதத்தில் பாண்டவர்களின் தலைவனான தருமன் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் அனைத்தையும் இழப்பார். இறுதியில், தன்னையும், தன் சகோதர்களையும் மற்றும் தங்களது மனைவி திரெளபதியையும் வைத்துத் தோற்பார். அப்போது திரெளபதியை கௌரவர்கள் அனைவரின் முன்னிலையிலும் துஷ்பிரயோகம் செய்வர் .

gambling

இந்த சம்பவத்தில் திரெளபதி கண்ணனை இறைஞ்சி வேண்டும்போது அவரது மானம் மறைக்கப்படுவதாக மகாபாரதத்தில் கூறப்பட்டு இருக்கும். ஆனால் தற்பொழுது இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் சூதாட்டத்தில் நண்பர்களிடம் மனைவியைப் பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஷஹபாத் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் அளித்த காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில்,'' கடந்த 2013 ஆம் ஆண்டு மொராதாபாத்தின் பிலாரி பகுதியைச் சேர்ந்த விரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. வரதட்சணைக்காக என் மாமனாரும் என் கணவரும் என்னைச் சித்ரவதை செய்து தாக்கினர்.

பாலியல் வன்கொடுமை; கை, கால் கட்டப்பட்டு சாலையில் கிடந்த பெண் - பதபதைக்கும் சம்பவம்!

பாலியல் வன்கொடுமை; கை, கால் கட்டப்பட்டு சாலையில் கிடந்த பெண் - பதபதைக்கும் சம்பவம்!

என் கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர், அவர் சூதாட்டத்தின்போது சுமார் ஏழு ஏக்கர் நிலம் மற்றும் எனது நகைகள் அனைத்தையும் இழந்துவிட்டார்.மேலும் அவரது நண்பர்களுடன் சூதாட்டத்தின்போது என்னைப் பணயம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யவும் அனுமதியளித்துள்ளார்.

உ.பியில் அதிர்ச்சி

அவர் எனக்குத் தண்ணீர் கூட கொடுக்காமல், அவரது நண்பர்கள் இருக்கும்போது என்னைத் தாக்கினார். இதனால் நான் எனது அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஆனால், செப்டம்பர் 4-ம் தேதி, அவர் தனது நண்பர்களுடன் அங்கு வந்து என் கையை உடைத்து என்னை வீட்டுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர்.

uttar pradesh

அப்போது என்னுடைய ஆடைகளைக் கிழித்து, கணவரும் அவருடைய நண்பர்களும் என்னைத் தாக்கினர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். என் கணவர் அவர்களுக்காக வைத்திருப்பதைச் சேமிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

எனவே என் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் எனக்குச் செய்த கொடுமைகளை என்னால் இப்போது வெளியில் சொல்ல முடியாது. அதை நான் நீதிமன்றத்தில் வெளிப்படுத்துவேன்' என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஷஹபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.