பும்ரா, ரிஷப், ராகுல் வேண்டாம்; அந்த வீரர்தான் கேப்டன் - கம்பீர் கோரிக்கை!

Jasprit Bumrah Indian Cricket Team Gautam Gambhir Yashasvi Jaiswal
By Sumathi Jan 13, 2025 08:44 AM GMT
Report

புது வீரருக்கு கேப்டன் பதவி கொடுக்க கௌதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கேப்டன்? 

இந்திய அணி கடந்த 8 போட்டிகளில் ஒரேயொரு டெஸ்டில் மட்டுமே வென்றது. அது ரோஹித் சர்மாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

bumrah - rishab pant

மேலும், கேப்டன்ஸியிலும் அவர் சொதப்புகிறார் என்பதால் புதுக் கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில், பிசிசிஐ உள்ளது. தொடர்ந்து புதுக் கேப்டனை தேர்வு செய்ய, பிசிசிஐ மீட்டிங் நடைபெற்றது.

அதில் பும்ராவுக்கு கேப்டன் பதவியை கொடுத்தால், அவர் தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், மீண்டும் அவருக்கு பெரிய காயம் ஏற்படலாம் என்பதால், பும்ராவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க முடியாது.

அவர் தலையில் துப்பாக்கியால் சுட நினைத்தேன் - யுவராஜ் தந்தை பகீர்

அவர் தலையில் துப்பாக்கியால் சுட நினைத்தேன் - யுவராஜ் தந்தை பகீர்

கம்பீர் கோரிக்கை

ரிஷப் பந்திற்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவாக பேசிய நிலையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ரிஷப் பந்த் வேண்டாம் என்றும் யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

gautam gambhir

இதற்கிடையில் புதுக் கேப்டனை நியமிக்கும் வரை, தான் கேப்டனாக தொடர்வேன், அதற்குமுன் ஓய்வு அறிவிக்க மாட்டேன் என பிசிசிஐயிடம் ரோஹித் சர்மா, தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.