விக்கெட் கீப்பர் பிரச்சனை !வெளியேற்றப்படுகிறாரா பண்ட்..அதிரடி முடிவில் கம்பீர்?
27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்துள்ளது கம்பீருக்கு பெரிய அதிர்ச்சி செய்தியாக வந்துள்ளது.
இந்தியா தோல்வி
நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் தொடரில் இந்திய அணி 138 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்திய அணியில் பேட்டிங் பெரிதாக எடுபடவில்லை. முதல் போட்டியில் சமனில் முடிந்த இந்தியா, 3-வது போட்டியில் பெரிதாக பின்னடைவை சந்தித்தது.
இதற்கு காரணமாக அணியை தான் கூற வேண்டும். தனியாக யாரையும் குறிப்பிட்டு கூறிவிட முடியாது. அணிக்கு தலைமை பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர், பெரிதாக விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார். அணியில், மிடில் ஆர்டரில் அவர் செய்த மாற்றங்களே காரணமாக இருக்கிறது.
மாற்றமா?
பின்வரிசையில் இறங்க வேண்டிய வாஷிங்டன் சுந்தர் முன்வரிசையில் வந்தது, பந்துவீச்சில் மாற்றம் செய்யப்பட்டது போன்றவை.

பாதியில் கழட்டிவிட்டப்பட்ட கே.எல்.ராகுல்? 3-வது போட்டியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் - குழப்பும் கம்பீர்
இதில் பந்துவீச்சு மாற்றங்கள் டி20 போட்டிகள் அணிக்கு பெரிதாக உதவியது. இது போன்ற மாற்றங்கள் ஒரு நாள் தொடரிலும் கை கொடுக்கும் என கம்பீர் நம்பியதன் காரணமாகவே அணியில் சில மாற்றங்கள் நாம் காணமுடிந்தது.
அதே போல, ரிஷப் பண்ட் அண்மை காலமாக பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தலாமே உள்ளார். நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அவரின் பங்களிப்பு அந்த அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம்.
அணியில் கே.எல்.ராகுல் இடம்பெறும் நிலையில், அவர் விக்கெட் கீப்பராக வருவாரா? பண்ட் மீண்டும் பெஞ்சில் அமருவரா? அடுத்து கம்பீர் மேற்கொள்ள போகும் அதிரடி மாற்றங்கள் என்ன என்பதே பலரின் கவனமும் இப்பொது.