விராட் கோலி உடனான உறவு.. மனம் திறந்த கம்பீர்
எனக்கும் கோலிக்கும் இடையேயான உறவு மக்களுக்கு மசாலா கொடுக்கும் உறவாக இருக்காது என கம்பீர் தெரிவித்துள்ளார்.
2024 ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று பதிலளித்தார்.
இந்நிலையில் விராட் கோலி உடனான உறவு குறித்து கம்பீர் வெளிப்படையாக பேசியுள்ளார். "விராட் கோலி உடனான எனது உறவை இந்த நாடு அறியத் தேவையில்லை. உங்களின் கணிப்புகள் எல்லாம் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன. அணியின் வெற்றிக்கு உதவுவதற்காக, உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்னைப்போல அவருக்கும் உரிமை உண்டு. எங்களின் உறவு மக்களுக்கு மசாலா கொடுக்கும் உறவாக இருக்காது" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் 2024 டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைய உள்ளதால்,. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.