ஷமி ஒன்னும் சின்ன பையன் இல்ல...அவர் எதிர்காலம் என்ன - கம்பீர் பேசணும்!! முன்னாள் பயிற்சியாளர்
ஷமி
முகமது ஷமி இந்தியாவின் 2023 ODI உலகக் கோப்பையின் நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். ஆனால் கணுக்கால் காயத்தால் ஓரங்கட்டப்பட்டார், திரும்புவதற்கான திட்டவட்டமான காலக்கெடு எதுவும் இல்லை.
பிப்ரவரியில் ஷமி தனது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து ஐபிஎல் மற்றும் டி 20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார். அவர் தற்போது rehabilation உட்பட்டுள்ளார்.
பேசணும்
எவ்வாறாயினும், இந்திய பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து பராஸ் மம்ப்ரே வெளியேறிய நிலையில், கவுதம் கம்பீர் அண்ட் கோவின் நிர்வாகம் ஷமியுடன் எவ்வாறு நடந்து கொள்ளும் என கேள்விகள் எழுந்துள்ளது. இது குறித்து மம்ப்ரே பேசும் போது, 33 வயதில் ஷமி ஒன்றும் அணியில் இளையவர் அல்ல - இல்லை. அவர் T20I reserve'இல் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் நிச்சயமாக ODI மற்றும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சிலவற்றை வழங்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கம்பீர் அவரிடம் பேசவேண்டும்.
இந்தியா ஒரு தீவிரமான டெஸ்ட் சீசனைத் தொடங்குவதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் அனைத்து முக்கியமான பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக ஷமி தனது சிறந்த ஆட்டத்தில் சில போட்டிகளை வைத்திருக்க வேண்டும் என்று மம்ப்ரே கருதுகிறார்.