என்னை விடுவித்து விடுங்கள் - பாஜகவிற்கு கம்பீர் திடீர் கடிதம் - இது தான் காரணம்..?

BJP Narendra Modi Indian Cricket Team Gautam Gambhir
By Karthick Mar 02, 2024 05:58 AM GMT
Report

 இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.

gambhir-quits-from-politics-citing-cricket-future

2019-ஆம் ஆண்டு பொது தேர்தலில் மத்திய ஆளும் பாஜகவின் டெல்லி மாநிலத்திலிருந்து எம்.பி'யாக தேர்வாகிய கம்பீர், அதனை தொடர்ந்து அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கட்டமாக விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வந்தார்.

கிரிக்கெட் பொறுப்பு

தற்போது தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அவர் தனது பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்கும் படி பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சின்ன பையன் வாழ்க்கையை காலி பண்ணிடாதீங்க..! ஜெய்ஸ்வாலின் நிலை - கம்பீர் Advice

சின்ன பையன் வாழ்க்கையை காலி பண்ணிடாதீங்க..! ஜெய்ஸ்வாலின் நிலை - கம்பீர் Advice

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாண்புமிகு கட்சியின் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஜே.பி.நட்டா எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும், அதனால் எனது வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் நான் கவனம் செலுத்த முடியும்.

gambhir-quits-from-politics-citing-cricket-future

மாண்புமிகு பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக நன்றி . ஜெய் ஹிந்த்! என பதிவிட்டுள்ளார்.