கம்பீர் கொடுத்த அந்த அட்வைஸ்; 6 வருஷமா கடைபிடித்த ஆர்யா - தந்தை உருக்கம்
கவுதம் கம்பீர் ஆலோசனைபடி பிரியன்ஷ் ஆர்யா செயல்பட்டு வந்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
பிரியன்ஷ் ஆர்யா
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பஞ்சாப் அணியின் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா காரணமாக அமைந்தார்.
39 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த இவர், விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பீர் ஆலோசனை
இந்நிலையில் இதுகுறித்து ஆர்யாவின் தந்தை பேசுகையில், யு19 கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரியன்ஷ் 271 ரன்களை விளாசினார். அப்போது முதல் கவுதம் கம்பீர் தான் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக ஆலோசனை கூறி வருகிறார்.
கவுதம் கம்பீர் எப்போதும் எவ்வளவு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியுமோ, அத்தனை போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கூறுவார். டெல்லி பிரீமியர் லீக் தொடரில் பிரியன்ஷ் ஆர்யாவை விளையாடுமாறு கம்பீர் தான் அறிவுறுத்தினார்.
வெப்பமான சூழலில் விளையாட வேண்டும் என்றும், அழுத்தமான சூழல்களில் விளையாடி பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதுதான் பிரியன்ஷ் ஆர்யாவுக்கு உதவி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.