தலைவலியாக மாறிய கம்பீர்!! ரோகித் - விராட்டிற்கு குடைச்சல் !! லீவு கூட ரத்து
உலகக்கோப்பை டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய சீனியர் வீரர்கள் ஓய்வு எடுத்துள்ளார்கள்.
இந்திய அணி
தலைமை பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர் அணிக்கு பல புது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
டி20, ஒரு நாள், டெஸ்ட் என ஒவ்வொரு அணிக்கு தனி தனி டீம் வேண்டும் என அவர் நிபந்தனை வைத்திருப்பதாகவும், டி20 தொடரில் சீனியர் வீரர்கள் இருக்கக்கூடாது என கூறினார் என்றெல்லாம் தகவல் வெளிவந்தன
அதன் காரணமாகவே, விராட் - ரோகித் - ஜடேஜா போன்றோர் உடனே டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவெல்லாம் தகவல் வெளிவந்தன. இந்நிலையில் தான், இந்திய அணி ஜூலை 26ஆம் தேதி முதல் ஸ்ரீலங்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
குடைச்சல்
இந்த தொடரில் அணியின் சீனியர் வீரர்களான விராட் - ரோகித் போன்றோர் ஒரு நாள் போட்டியில் விளையாடவேண்டும் என கம்பீர் நிபந்தனை வைத்திருக்கிறாராம்.
அதன் காரணமாக, விடுப்பில் இருக்கும் ரோகித் - விராட் ஆகியோரை விடுமுறையை ரத்து செய்துவிட்டு வரும் படியும் அவர் பிசிசிஐ இடம் நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்னும் இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
