பயிற்சியாளரான கம்பீர்...குறையாத தோனி ரசிகர்களின் விமர்சனம்!! அப்படி என்னதான் சொன்னார்?

MS Dhoni Indian Cricket Team Board of Control for Cricket in India Gautam Gambhir
By Karthick Jul 10, 2024 06:51 AM GMT
Report

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கம்பீர்

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றியவர் கம்பீர்.

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் - சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் - சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

இறுதி போட்டியில் இந்திய அணி சச்சின், சேவாக் போன்றவர்கள் தடுமாறி வெளியேறிய நிலையில், நிலைத்து நின்று விளையாடிய கம்பீர் 97 ரன்களை எடுத்து அவுட்டாகினார். 2016-ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றவர், தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராகியுள்ளார். அவர் அடுத்த 3 ஆண்டுகள் அதாவது 2027 வரை அணியின் பயிற்சியாளராக நீடிப்பார்.

Gautam Gambhir

கம்பீர் மீது எப்போதும் ஒரு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. கம்பீர் தோனியின் 2011-ஆம் ஆண்டு இறுதி போட்டி ஆட்டத்தை சற்று விமர்சித்து பேசியதை தோனியின் ரசிகர்கள் இன்று வரை விமர்சிக்கிறார்கள். உண்மையில் அணியின் வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பே காரணம்.

என்னதான் சொன்னார்

இருப்பினும், தோனி தான் கோப்பையை வெல்ல காரணமாகி விட்டார் என்று இன்று வரையிலும் அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை நாம் காண முடிகிறது. இந்த சூழலில், கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆனதும் விமர்சிக்கப்படுவதை காண முடிகிறது.

Gautam gambhir Dhoni

உண்மையில், கம்பீர் அப்படி என்னதான் சொன்னார் என்றால், அவர் "போட்டியில் தோனி சிக்ஸர் அடித்ததால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றதாக பலரும் தோனியை கொண்டாடுகிறார்கள். உண்மையில் ஒட்டுமொத்த அணியின் முயற்சியாலேயே இந்தியா வெற்றி பெற்றது. இவ்வாறு அவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.