உங்களுக்கு எத்தனை மனைவிகள்? டிரம்பிடம் கேட்ட அதிபர் - வைரலான வீடியோ!

Donald Trump Viral Video Syria
By Sumathi Nov 15, 2025 09:27 AM GMT
Report

டிரம்ப்-சிரிய அதிபர் சந்திப்பு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

எத்தனை மனைவிகள்?

சிரியாவின் அதிபர் அகமது அல்-ஷரா அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.அவரை டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் வரவேற்றார்.

sharaa - trump

அப்போது டிரம்ப், வாசனை திரவியம் அடைக்கப்பட்ட பாட்டில் ஒன்றை ஷராவிடம் கொடுத்து விட்டு, இது ஆண்களுக்கான நறுமண திரவியம் என்றார்.

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மையா? விஞ்ஞானிகள் சொல்வதென்ன!

மனிதர்களுக்கு ஏழாவது அறிவு இருப்பது உண்மையா? விஞ்ஞானிகள் சொல்வதென்ன!

சிரிப்பலை 

தொடர்ந்து, மற்றொரு பாட்டில் உங்களுடைய மனைவிக்கு என கூறி விட்டு, உங்களுக்கு எத்தனை மனைவிகள் உள்ளனர்? என கேட்டார். அதற்கு ஷரா, ஒரே ஒரு மனைவிதான் என்றார்.

அவருடைய தோளில் தட்டி கொடுத்து விட்டு, நண்பர்களே, எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது என டிரம்ப் கூறினார்.

பின் பதிலுக்கு டிரம்பிடம் உங்களுக்கு எத்தனை மனைவிகள்? என ஷரா கேட்டார். அதற்கு டிரம்ப், ஓ, இதுவரை ஒன்றுதான் என கூறி சிரிப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.