மணப்பெண் தேவை; அடுத்தது நாங்க தான்.. இணையத்தை கலக்கும் கல்யாண வீட்டு பேனர்!
கல்யாண வீட்டில் வைக்கப்பட்ட பேனர் கவனம் ஈர்த்துள்ளது.
கல்யாண வீடு
காரைக்கால், வாரச்சந்தை அருகே தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அதில், அப்பகுதியை சேர்ந்த அருண் பிரசாத், மதுநிகா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் திருமணத்தில், இவர்களின் நண்பர்கள் தினசரி நாளிதழ் வடிவில் வரவேற்பு பேனர் அடித்து வைத்துள்ளனர். அது அங்குள்ள பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பேனரால் கலகல..
அந்த பேனரில், ‘காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை செய்து வைக்கப்படுகிறது’. ‘கறிகஞ்சி கிடைக்காததால் கைகலப்பு’ ‘நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு’. கல்யாண பந்தியில் கலவரம்.

பந்தியில் பலகாரம் திருட்டு என்றெல்லாம் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் “மணப்பெண் தேவை” என கூறி நான்கு 2K கிட்ஸ் இளைஞர்கள் தங்களது புகைப்படம், வயது, படிப்பு, பதிவிட்டு ஊதியம்: தேவையான அளவு.
அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்தா தாங்க! குறிப்பு பொண்ணா இருந்தா மட்டும் போதும்” என்று பதிவிட்டுள்ளனர்.
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil