திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி - வைரலாகும் பேனர்..!
திருமண வரன்களை தடுத்து நிறுத்தம் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் பேனர்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ளது மேலச்சுண்டவிளை கிராமம். இங்கு யாரோ ஒருவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை எல்லாம் தடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரை எச்சரிக்கும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் பூடகமாக வைத்திருக்கும் பதாகை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேனரை ஊரில் உள்ள பொதுவான ஒரு தோட்டத்துக்கு காம்புவண்டில் ஆணி அடித்து வைத்துள்ளார்.
நெஞ்சார்ந்த நன்றி!
அந்த பேனரில் வணக்கம், முக்கிய அறிவிப்பு. கருங்கல் லேச்சுண்டவிளை பகுதியில் உள்ள ஒரு சில நபர்களின் திருமண வரன்களை மட்டும் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!! மேலும் தங்களது நற்பணி தொடருமானால் சமந்தப்பட்டவர்களுடைய பெயர் மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கின்றோம் இப்படிக்கு பாதிக்கப்பட்டவர் என பேனர் வைத்துள்ளார்.
இந்த பேனர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.