மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்; முன்கூட்டியே இறுதிச்சடங்குக்கு தயாராகும் அரண்மனை!

Cancer London Prince Charles England
By Swetha Apr 26, 2024 10:57 AM GMT
Report

புற்றுநோய் பாதிப்பு மோசமடைந்ததால் இங்கிலாந்து மன்னர் கவலைக்கிடமாக இருக்கிறார்.

மன்னர் சார்லஸ் 

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்(75). கடந்த 2022-ம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் ராணி, உயிரிழந்ததை அடுத்து, சார்லஸ் மன்னராக முடிசூடினார்.இதற்கிடையில் அவருக்கு ஏற்கனவே புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்; முன்கூட்டியே இறுதிச்சடங்குக்கு தயாராகும் அரண்மனை! | Funeral Plans Of King Charles Are Under Review

தொடர்ந்து, அவருக்கு இன்னொரு வகை புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.ஆனால், எந்த வகை புற்றுநோய் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனவே, அவர் வழக்கமான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், மன்னரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான பிரம்மாண்ட இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இப்போதே செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ’மெனாய் பாலம்’ என்ற மறைமுகப் பெயரில் ஏற்பாட்டுக்கான ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளன.

மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்; முன்கூட்டியே இறுதிச்சடங்குக்கு தயாராகும் அரண்மனை! | Funeral Plans Of King Charles Are Under Review

அதாவது மெனாய் பாலம் என்பதன் பொருள் ஆங்கிலேசி தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் ஒரு தொங்கு பாலத்தின் பெயராகும். எனவே தன் அந்த பெயரில் மன்னர் சார்லஸின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டு வருகின்றனர்.

மன்னர் சார்லஸூக்கு புற்றுநோய்; அரண்மனை தகவல் - அவசரமாக லண்டன் திரும்பும் ஹாரி?

மன்னர் சார்லஸூக்கு புற்றுநோய்; அரண்மனை தகவல் - அவசரமாக லண்டன் திரும்பும் ஹாரி?

கவலைக்கிடம்

இதே மாதிரி தான் ராணி எலிசபெத் கவலைக்கிடமாக இருந்தபோது, ஆபரேசன் லண்டன் பாலம் என்ற மறைமுகப் பெயரில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஆவணங்கள் இடம்பெற்றிருந்தது.

மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்; முன்கூட்டியே இறுதிச்சடங்குக்கு தயாராகும் அரண்மனை! | Funeral Plans Of King Charles Are Under Review

இங்கிலாந்து மன்னரான சார்லஸுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு என்ற செய்தி பரவிய போது அவற்றை மன்னரே மறுத்துள்ளார். அந்த புற்றுநோய் எந்த வகையில் அடங்கும் எவ்வளவு காலமாக அவரை அது பாதித்திருக்கிறது என்பது உறுதிப்படுத்தவில்லை.

அதனால் நவீன சிகிச்சைகள் எதற்கும் மட்டுப்படாது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சுழலில் பக்கிம்ஹாம் அரண்மனை பல சவால்களுக்கு தயாராகி வருகிறது.

மன்னர் சார்லஸ் கவலைக்கிடம்; முன்கூட்டியே இறுதிச்சடங்குக்கு தயாராகும் அரண்மனை! | Funeral Plans Of King Charles Are Under Review

மன்னர் இறுதிச்சடங்குக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மட்டுமன்றி அதில் பல உலகத்தலைவர்கள் வருகை புரிந்து துக்கம் விசாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இறுதி ஊர்வலம் தொடங்கி சடங்குகள் வரையிலான நடைமுறைகள், சிறிய இடைவெளியில் அடுத்த மணிமகுடத்துக்கு இளவரசர் வில்லியமை தயார் செய்வது போன்றவை இந்த சவால்களில் காத்திருக்கின்றன.