முழுநேர மகளாக வேலைபார்க்க ரூ.47,000 சம்பளமா? - புதுசா இருக்கே!

China
By Vinothini May 29, 2023 07:28 AM GMT
Report

தனது முழுநேர மகளாக வேலை பார்க்க ரூ.47,000 சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் பெற்றோர் குறித்து வைரலாகி வருகிறது.

சீனா

சீன நாட்டை சேர்ந்த நியானன் என்ற 40 வயது பெண் சுமார் 15 ஆண்டுகள் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

full-time-job-as-daughter-in-china

அந்த வேலை மிகவும் மன அழுத்தம் கொண்டதாக, தினமும் செல்போனில் அழைப்பு வந்துகொண்டே இருக்கும். நிம்மதி இல்லாத வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனை கவனித்த இவரது பெற்றோர் இவருக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், அவர்கள் "நீ இப்படி கஷ்டப்பட வேண்டாம். ஏன் நீ வேலையை விட்டுவிடக்கூடாது. உன் பொருளாதார தேவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

இவரது பெற்றோருக்கு மாதம் 10,000 யுவான் அவாவது இந்திய மதிப்பில் ரூ.1.17 லட்சம் ஓய்வூதியம் கிடைத்து வருகிறது. அதில் 4,000 யுவான், இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,000 உனக்கு தருகிறோம். நீ எங்கள் முழு நேர மகளாக இரு என்று கூறியுள்ளனர்.

வினோத வேலை

இதனை தொடர்ந்து, பெற்றோரிடம் இருந்து இப்படி ஒரு ஆஃபர் வந்ததும் அதை ஜாலியாக ஏற்றுக்கொண்டார். தற்போது இந்த வேலை காதல் நிறைந்த ஒன்றாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

full-time-job-as-daughter-in-china

தினசரி மாற்றுப்பட்ட பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறினார். மேலும், காலை நேரத்தில் ஒரு மணிநேரம் பெற்றோருடன் நடனமாடி, பின்னர் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு செல்கிறேன்.

மாலை நேரத்தில் தந்தையுடன் இணைந்து சமைக்கிறேன். எலக்ட்ரானிக் சார்ந்த வேலைகள், பெற்றோருக்கு டிரைவராகவும், குடும்ப சுற்றுலாகவுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற வேலைகளை செய்து வருகிறேன் என்று கூறி மகிழ்வுடன் வேலை பார்த்து வருகிறார்.

இதை விட சிறந்த வேலை கிடைத்தால் நீ அதற்கு செல்லலாம், அதுவரை நீ இப்படியே இருந்து கொள் என அவரிடம் கூறியுள்ளனர்.

எனவே, தற்போது முழு நேர மகள் வேலையை மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறார்.