வெளியே ஜூஸ் வாங்கி குடிப்போர் கவனத்திற்கு! ஐஸ் கட்டியில் இறந்த எலி - பகீர் சம்பவம்!
ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படும் ஐஸ் கட்டியில் உறைந்த நிலையில் எலி சடலம் கிடந்துள்ளது.
இறந்த எலி
இந்த கடுமையான வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் தாங்கமுடியாத அளவிற்கு உள்ளது. அதிலிருந்து தப்பிக்க ஐஸ் கட்டிகள் சேர்த்த குளிர்ச்சியான பழச்சாறுகள் குடிக்க பலரும் விரும்புவதுண்டு. அதுவும் கடைகளில் கிடைக்கும் ஜூஸ் சுவைக்கு நாடுவோர் அதிகம்.
பழச்சாறு மட்டுமல்லாமல் லஸ்ஸி, கரும்புச்சாறு, மில்க் ஷேக், ஜிகர்தண்டா, ஃபலூடா என ஏராளமான வெயில் காலத்துக்கு இதமான குளிர் உணவுகள் பெரும்பாலும் ஐஸ் கட்டிகளை நம்பியே இயங்குகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்பட்ட பனிக்கட்டி ஒன்றில் உறைந்த நிலையில் எலி சடலம் கண்டறிப்பட்டுள்ளது.
பகீர் சம்பவம்
குளிரான உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள், ஹோட்டல்கள் முதல் தெருவோர கடைகள் வரைவிநியோகிக்கப்படும் இந்த ஐஸ் கட்டிகளில் செத்த எலி இருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வாட்ஸ் ஆப் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உள்ளிட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருப்பது தான் இதற்கு காரணம் என மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து,காவல்துறை இது தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.இந்த ஐஸ் கட்டிகள் விநியோகம் செய்யப்பட்ட இடங்கள், ஐஸ்கட்டி தொழிற்சாலைகள் உட்பட தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.