ஆர்டர் செய்த தோசைக்கு பதில் கரப்பான் பூச்சிகளை பரிமாறிய உணவகம் - viral video

Viral Video Delhi
By Swetha Mar 16, 2024 11:32 AM GMT
Report

பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்த தோசைக்குள் கரப்பான் பூச்சி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல உணவகம்

டெல்லியில் உள்ள கானாட் பிளேஸ் பகுதியில் செயல்படும் மெட்ராஸ் காபி ஹவுஸ் எனப்படும் பிரபல உணவகத்தில் தனது தோழியுடன் இஷானி என்ற பெண் சென்றுள்ளார். அங்கு இருவரும் தோசை ஆர்டர் செய்துள்ளனர்.

ஆர்டர் செய்த தோசைக்கு பதில் கரப்பான் பூச்சிகளை பரிமாறிய உணவகம் - viral video | Shocking Video Of Eight Cockroaches In A Dosa

ஆர்டரின் பிரகாரம் அவர்களுக்கு சுவையான பொடி தோசை பரிமாறப்பட்டது.அந்த தோசையை சாப்பிட்ட இஷானி முகம் மாறியது, சைவ பிரியரான அவருக்கு தான் சாப்பிட்ட தோசை சைவம் இல்லை என்பதை உடனே புரிந்துகொண்டார்.

உடனே தோசையை பிரித்து பார்த்த அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஆர்டர் செய்த தோசைக்குள் ஒன்று இரண்டல்ல குட்டிக்குட்டியாய் எட்டு கரப்பான்பூச்சிகளை இஷானியும் அவரது தோழியும் கண்டறிந்துள்ளனர்.

5 ஆயிரம் கி.மீ கடந்து டேட்டிங்; காதலர் செய்த காரியம் - பெண் எடுத்த ஷாக் முடிவு!

5 ஆயிரம் கி.மீ கடந்து டேட்டிங்; காதலர் செய்த காரியம் - பெண் எடுத்த ஷாக் முடிவு!

கரப்பான் பூச்சிகள்

இதைப்பற்றி அந்த உணவகத்தில் இஷானி கேட்டபோது அங்கு உள்ளவர்கள் தன்னை மிரட்டியதாகவும், மற்றும் பேரம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து, போலீஸார் முதல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வரை பல தரப்பினரிடமும் இஷானி புகார் அளித்திருக்கிறார்.

ஆர்டர் செய்த தோசைக்கு பதில் கரப்பான் பூச்சிகளை பரிமாறிய உணவகம் - viral video | Shocking Video Of Eight Cockroaches In A Dosa

மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு கிடைத்த அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் விரிவாக பதிவிட்டிருக்கிறார், ”ஒரு புகழ்பெற்ற உணவகம் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களின் சமையலறையை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. பாதிக்கு கூரை இல்லை.

உணவகத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கையை அப்படியே விடமாட்டேன். தோசையில் கரப்பான் பூச்சி பரிமாறிய உணவகத்தினர் என்னை மிரட்டவும், சமாதானப்படுத்தவும் முயன்றனர்.

எனக்கு பரிமாறியது போன்று ஒரே தோசையில் எட்டு கரப்பான்களை உங்களில் ஒரு சைவ உணவாளர் சாப்பிட்டு காட்டட்டும் என அவர்களிடம் நிபந்தனை வைத்தேன். அவர்கள் தவறை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு இஷானி குறிப்பிட்டுள்ளார்.