அதென்ன Friendship Marriage? நோ காதல் - நோ கமிட்மெண்ட் - டிரெண்டாகும் நடைமுறை
ஃப்ரெண்ட்ஷிப் மேரேஜ் என்கிற விஷயம் ட்ரெண்டாகி வருகிறது.
ஃப்ரெண்ட்ஷிப் மேரேஜ்
பரஸ்பர நம்பிக்கை நட்பின் அடிப்படையில் பிரண்ட்ஷிப் மேரேஜ் அமைகிறது. திருமண பாரம்பரிய முறை இதில் இருக்காது. ஆனால் திருமணம் செய்து கொள்வார்கள். தனித்தனியாக தான் வாழ்வார்கள்.
இருவரும் படுக்கையறைய பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். திருமணத்தை ஆண்-பெண் இரண்டு குடும்பம் அங்கீகரித்தாலும், சட்டம் அங்கீகரித்தாலும் கணவன், மனைவியாக வாழ்வதில்லை.
இளைஞர்கள் ஆர்வம்
இந்த நடைமுறை முதன் முதலாக ஜப்பான் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. தற்போது சீனர்களும் இந்த நடைமுறையை விரும்ப ஆரம்பித்து செயல்படுத்துகின்றனர். இந்த திருமணத்தில் வேறு யாருடனும் டேட்டிங் செல்ல வேண்டும் என்று நினைத்தால் கூட போகலாம்.
அதற்கு எந்த தடையும் கிடையாது. ஒருவேளை குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், அல்லது செயற்கை கருவுறுதல் முறையை பின்பற்றி குழந்தையை பெற்றெடுத்தும் வளர்க்கலாம்.
இந்த நடைமுறை மூலமாக திருமணம் சார்ந்த அழுத்தம் குறைவதாக சீன இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.