என் ஃப்ரெண்ட போல... காதலிகளுடன் நண்பர்கள் நேரம் செலவிட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்
காதலிகளுடன் தனது நண்பர்கள் நேரம் செலவிட நபர் ஒருவர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே நகருக்கு புறப்பட தனியார் விமானம் ஒன்று தயாராக இருந்தது. திடீரென அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் சென்றது. தொடர்ந்து, 182 பயணிகளையும் இறக்கிவிட்டு சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது.

அதனையடுத்து விசாரித்ததில், துவாரகா நகரை சேர்ந்த அபினவ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், 7 மாதங்களாக பிரிட்டிஷ் ஏர்வேசில் டிக்கெட் ஏஜெண்டு பணியில் பயிற்சி பெறுபவராக இருந்துள்ளார்.
நல்ல நண்பன்..
அவருக்கு ராகேஷ் மற்றும் குணால் ஷெராவத் என இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சமீபத்தில் மணாலிக்கு சுற்றுலா சென்றதில் 2 பெண்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் புனேக்கு புறப்பட்டுள்ளனர்.
ஆனால், அந்த பெண்களுடன் நேரம் செலவிட விரும்பியுள்ளனர். இதனால், அவர்களை போக விடாமல் செய்ய வெடிகுண்டு புரளியை பரப்பினால், விமானம் ரத்து செய்யப்படும் எனத் திட்டம் தீட்டியுள்ளனர். அவரது 2 நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.