முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

stalin bomb threat
By Irumporai May 21, 2021 04:54 PM GMT
Report

தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் நடத்திய சோதனையில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

முதற்கட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் அரக்கோணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே, இதே இளைஞர், பல முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.