ட்ரீட் தர மறுத்த சிறுவன் - நண்பர்கள் செய்த கொடூர செயல்
ட்ரீட் தர மறுத்த சிறுவனை நண்பர்கள் குத்தி கொலை செய்துள்ளனர்.
போன் வாங்கியதற்கு ட்ரீட்
டெல்லியின் ஷகர்பூரில் அரசு பள்ளியில் 9 வது வகுப்பு படித்து வரும் சிறுவன் சச்சின். இந்நிலையில் சச்சின் புதியதாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியுள்ளார்.
ஸ்மார்ட் போன் வாங்கியதற்காக சச்சினின் மூன்று நண்பர்கள் ட்ரீட் கேட்டுள்ளனர். ஆனால் சச்சின் ட்ரீட் வழங்க மறுத்துள்ளார்.
குத்தி கொலை
இதனால் நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சச்சினை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சச்சினை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சச்சின் உயிரிழந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சச்சினை கொலை செய்த 16 வயதுடைய மூன்று சிறுவர்களை கைது செய்தனர்.