வெளிநாட்டில் செட்டில் ஆகனுமா? இந்தியர்களை வரவேற்கும் நாடுகள் - தகவல் இதோ!
உலகின் எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நட்பு நாடுகள்
உலக நாடுகளில் பல இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளையும், ரெசிடென்ஸ்க்கான சலுகைகளையும் வழங்குகிறது.
அந்த வகையில், கனடா குடியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கு சிறந்த நாடுகளில் ஒன்று. விசாக்கள், படிப்பு மற்றும் பணி அனுமதிகள் மற்றும் பட்டப்படிப்பு பணி அனுமதிகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. சுற்றுலா விசாக்கள், மாணவர் விசாக்கள், பணி விசாக்கள், நிரந்தர வதிவிட விசாக்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் நுழைவு திட்ட விசா என பல்வேறு வசதிகள் உள்ளன.
குடியுரிமை வசதிகள்
சர்வதேச மாணவர்களுக்கு மிகவும் நட்பு நாடாக விளங்குவது நியூசிலாந்து. பட்டப்படிப்பு பணி அனுமதி மற்றும் நிரந்தர குடியுரிமை வசதிகள் இங்கு வழங்கப்படுகின்றன.
ஆஸ்திரேலியா எளிதான குடியேற்ற செயல்முறை மற்றும் கொள்கைகளுடன் உலகம் முழுவதிலுமிருந்து தகுதியான விண்ணப்பத்தாரர்களை வரவேற்கிறது.
உலகின் நான்காவது பெரிய நிதி மையமாக இருப்பது சிங்கப்பூர். இதுவும் எளிதான குடியேற்ற செயல்முறை கொண்ட நாடுகளின் வகையின் கீழ் வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான ஒரு நாடு ஜெர்மனி. இங்கு விதிகள், நெறிமுறைகள் மற்றும் கொள்கைகள் குடியேற்ற செயல்முறையை சிரமமின்றி இல்லாமல் செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
